search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா அருங்காட்சியகம்"

    • குழந்தை திருஞானசம்பந்தர் ஐம்பொன் சிலை கடந்த 1965-ம் ஆண்டு திருட்டு போனது.
    • தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் மூலம் காணாமல் போன குழந்தை திருஞானசம்பந்தர் சிலை திருஞானசம்பந்தர் சிலை உட்பட 10 சிலைகள் ஆஸ்திரேலியாவில் அருங்காட்சியகத்தில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்கபட்டு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த்முரளி ஆகியோரிடம் ஒப்படைக்க ப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே மேலையூர் சாயாவனம் பகுதியில் கோசாம்பிகை உடனாகிய ரத்தின சாயாவனேஸ்வரர் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள குழந்தை திருஞானசம்பந்தர் ஐம்பொன் சிலை கடந்த 1965-ம் ஆண்டு திருட்டு போனது.

    இந்த நிலையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் மூலம் காணாமல் போன குழந்தை திருஞானசம்பந்தர் சிலை திருஞானசம்பந்தர் சிலை உட்பட 10 சிலைகள் ஆஸ்திரேலியாவில் அருங்காட்சியகத்தில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்கபட்டு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த்முரளி ஆகியோரிடம் ஒப்படைக்க ப்பட்டது.

    பின்பு சுவாமி சிலைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் கும்பகோணம் சிறப்பு நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டடது.

    இந்நிலையில் நேற்று இரவு இந்துசமய அறநிலைய இணை ஆணையர் மோகன சுந்தரம் வழிகாட்டுதலின்படி கோயில் செயல் அலுவலர் அன்பரசன் மூலம் சாயாவனம் கோயிலுக்கு திருஞானசம்பந்தருக்கு சிலை கொண்டுவரப்பட்டது. அப்போது கிராம மக்கள் கூடி நின்று வரவேற்று தரிசித்தனர்.

    பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருஞானசம்பந்தர் சிலைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு திருஞானசம்பந்தர் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    ×